மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் – திமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

- உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில் எடப்பாடி , சங்ககிரி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் என மனு கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து உயர்நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கிறது என்ற உறுதி மொழியையும்,சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் எழுத்துபூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியநாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் தரப்பில் அளித்த விளக்கத்தில் ,நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதற்கு திமுக தரப்பில் சேலம், கரூர் மாவட்டங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. இறுதியாக நீதிமன்றம், வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்து வழக்கை ஜனவரி 20 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.