#ElectionNews: வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.!
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை 7,121 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது விவரங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 22ம் தேதி மாலை 3 மணிக்கு பிறகு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி தேர்தலில் 486 பேர் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.