தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு என பல்வேறு சிறப்புகளை கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக.
தமிழக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க பாடுபடுவோம். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற குரல் கொடுப்போம். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தல். ஏழு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுப்போம். சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைத்திடவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம். தமிழகத்தில் இந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கப்படுவதை மதிமுக எதிர்க்கும். கல்வியை பொதுப்பிரிவிலிருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பு, முழு மதுவிலக்கை கொண்டு வருவது என பல்வேறு அம்சங்கள் இருக்கும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். காவேரி டெல்டாவை பாலைவனமாக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது, தமிழக நலன்களுக்கு எதிராக பாஜக அரசுக்கு கள்ளத்தனமாக அதிமுக துணைபோகிறது என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…