#ElectionBreaking : நாம் தமிழர் கட்சியினர் இருவர் கைது..!
வீரப்பன் சத்திரம் அருகே திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்
நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் நாம் தமிழர் மற்றும் திமுக கட்சியினர் 11 பேர் காயமடைந்தனர். மேலும் 3 காவல் துறையினரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக – நாம் தமிழர் கட்சியினர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினர் கைது
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கணேஷ் பாபு மற்றும் விஜய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.