தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இன்னும் முழுமையாக கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிடிவி தினகரனும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…