#ElectionBreaking : வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மக்களுக்கு நன்றி
அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கில் வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி. ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி 20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். இது நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான ஆச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றியுள்ளது. இது ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
அயராது பாடுபட்ட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள். ஈபிஎஸ் பேசியதற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.
நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கின்றேன். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை முடிவு என தெரிவித்துள்ளார்.