#ElectionBreaking: நீட் தேர்வுக்கு பதில் சீட் (SEET) தேர்வு – மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை.!

Default Image

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு பதிலாக சீட் (SEET) தேர்வு நடத்தப்படும் என கமல்ஹாசன் வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று கோவையில் பிற்பகல் 12 மணிக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதற்கு முன்னதாக மக்காள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழகத்தை உருவாக்க 18 திட்டங்களை கொண்ட மக்களாட்சி, அறிவார்ந்த அரசியல், சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்பில் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத் திட்டத்திற்கு ஏற்ப தமிழக மருத்துவ கல்லூரி பயில விரும்பும் மாணவர்களுக்கு சீட் (SEET) தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓராண்டில் ஆங்கில மொழி புலமை, மற்ற மொழிகள் பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு வழங்கப்படும். மேடு, பள்ளம் இல்லாத மேம்படுத்தப்பட்ட சமூகநீதி வழங்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய, வேறுபாடு களைந்த அரசியல் நீதி வழங்கப்படும். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு, முழு மதுவிலக்கை கொண்டு வருவதே இலக்கு என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படை கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு. 1.3 கோடி பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு என பல்வேறு சிறப்பம்சங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident