#ELECTIONBREAKING : புதுச்சேரியில் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ம.நீ.ம…!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் அறிவித்து, பிரச்சாரம் என தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாஹே – ஜலால், நெடுங்காடு – அரவிந்த்ராஜ், திருநள்ளாறு – பிச்சரசு, காரைக்கால் தெற்கு – ஏ.சூசை, நிரவி – முகமது ஹாஜா பத்ரூதின் போட்டியிடுகின்றனர்.