சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்.
தேமுதிக அதிமுகவில் இருந்து விலகி, நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிடிவி தினகரனின் அமமுகவுடன் கைகோர்த்து. அந்த கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக சட்டப்பேரவையில் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதனிடையே, நாளையுடன் வேட்புமனு தாக்கல் தேதி நிறைவடைவதை தொடர்ந்து, விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு விஜயகாந்த் தனித்து வென்ற தொகுதி விருத்தாச்சலம். இந்த தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
விருத்தாச்சலம் தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ், பாமகவை எதிர்த்து அங்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் போது எல்கே சுதீஷும் உடனிருந்தார்.
கடந்த 2006ம் ஆண்டில் விஜயகாந்த் தனித்து வென்ற தொகுதி விருத்தாச்சலம் என்ற காரணத்தினால் அத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அங்கு சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…