#ElectionBreaking : சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்…! பிரச்சாரம் நிறுத்தம்…!
வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் அவர்கள் களமிறங்கியுள்ளார். இவர் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்.
இவர் வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், எங்கள் பகுதிக்கு 5 ஆண்டுகளாக நீங்கள் எந்த திட்டத்தை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி அவரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து மக்கள் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட நிலையில், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பி சென்றார்.