#ElectionBreaking: தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கீடு.!
திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என அக்கட்சி தலைவர் வேல்முருகன் அறிவிப்பு.
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, அண்மையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் தேர்தலில் போட்டியிட விருப்பும் தொகுதியை திமுகவிடம் எடுத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து, எந்த தொகுதி என்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு சட்டப்பேரவை பண்ருட்டி தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். பண்ருட்டி தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்று, தமிழ் மக்களுக்கு என்னால் முடிந்த பணிகளை சிறப்பாக செய்வேன். ஏற்கனவே இரண்டு முறை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று மக்களுக்கான பிரச்சனையில் ஈடுபட்டிருக்கிறேன்.
அந்தவகையில் மீண்டும் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கூறியுள்ளார். அதிமுக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருகிறது. திமுக கூட்டணி பலம் பெற்று வருகிறது. தேமுதிக விலகியதால், அவர்கள் ஒட்டு சிதறும்போதும் அல்லது அமமுகாவுடன் இணையும்போதும், திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார்.