#ElectionBreaking : பாமக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அவர்கள் 9 சட்டமன்ற தொகுதிக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி 9 சட்டமன்ற தொகுதிக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை-திரு.சித்தமல்லி ஏ.பழனிசாமி, விருத்தாச்சலம்- திரு.ஜே.கார்த்திகேயன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திரு.ஏ.ஏ.கசாலி, நெய்வேலி திரு.கோ.ஜெகன், கும்மிடிப்பூண்டி- திரு எம்.பிரகாஷ், சோளிங்கர்- கிருஷ்ணன், கீழ்வேளூர்- திரு.வேத முகுந்தன், காஞ்சிபுரம்- திரு.சிவகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.