#ElectionBreaking: தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு தடையில்லை என்றும் தேர்தலுக்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதால் தடைவிதிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதிபடுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதால் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடைகோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ஜலாவுத்தீன் என்பவர் பொதுநல வழக்கை தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.