சட்டமன்ற தேர்தல் முடிவில் பெரும்பான்மையான இடங்களில் திமுக முன்னிலை பெற்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், 71.49% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களமிறங்கியிருந்தது.
சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக 156 இடங்களிலும், அதிமுக 78 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர். இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 124 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16, மதிமுக 4, சிபிஎம் 2, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், திமுக தற்போது இருக்கும் முன்னிலையின் படி, தமிழகத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சர் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முக ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிகாரப்பூர்வமான வாக்கு எண்ணிக்கையின் முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் இருபெரும் தலைவர்கள் இல்லாமல் இரு கட்சியினரும் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும். இதில், திமுக ஆட்சியமைக்க தேவையானதற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் அரியணையில் ஏறுகிறார் முக ஸ்டாலின்.
எனவே, தமிழகத்தின் முதல்வராகும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ராகு காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிகாரிகள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை நேரில் சென்றும், சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…