#ElectionBreaking: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.!

சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. இந்த கூட்டணியில் சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40, தொகுதிகள் மற்றும் மநீம 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணை பொது செயலாளர் ராதிகா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியில் SDPI கட்சி இணைவது உறுதியான என்றும் SDPI கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் :
- மதுரவாயல் – பத்மபிரியா
- மாதவரம் – ரமேஷ் கொண்டலசாமி
- ராதாகிருஷ்ணன்நகர் – ஃபாசில்
- பெரம்பூர் – பொன்னுசாமி
- வில்லிவாக்கம் – டாக்டர். சந்தோஷ் பாபு
- எழும்பூர் -பிரியதர்ஷினி
- அண்ணா நகர் – பொன்ராஜ்
- விருகம்பாக்கம் – சினேகன்
- சைதாப்பேட்டை – சினேகா மோகன்தாஸ்,
- பல்லாவரம் – செந்தில் ஆறுமுகம்
- தாம்பரம் – சிவ இளங்கோ
- திருப்போரூர் – லாவண்யா
- காஞ்சிபுரம் – கோபிநாத்
- ஓசூர் – மசூத்
- பாலக்கோடு – ராஜசேகர்
- பென்னாகரம் – கே.ஷகிலா
- தி.மலை – அருள்
- செய்யாறு – மயில்வாகனன்
- ஓமலூர் – வி.ஸ்ரீனிவாசன்
- மேட்டூர் – அனுசியா
- நாமக்கல் – அதாம் ஃபரூக்
- குமாரபாளையம் – காமராஜ்
- ஈரோடு கிழக்கு – ஏஎம் ஆர் – ராஜ்குமார்
- ஈரோடு மேற்கு – துரை சேவகன்
- மொடக்குறிச்சி – ஆனந்தம் ராஜேஷ்
- பெருந்துறை – சி.கே நந்தகுமார்
- உதகை – டாக்டர். சுரேஷ் பாபு
- குன்னூர் – எச்.பி ராஜ்குமார்
- கூடலூர் – ஜே. பாபு
- மே.பாளையம் – கே.லட்சுமி
- அவினாசி – ஏ.வெங்கடேஷ்வரன்
- திருப்பூர் வடக்கு – சிவபாலன்
- திருப்பூர் தெற்கு – அனுஷா ரவி
- பல்லடம் – மயில்சுவாமி
- சூலூர் – ரங்கநாதன்
- கிணத்துக்கடவு – ஏ.சிவா
- வால்பாறை – டி.செந்தில்ராஜ்
- மடத்துக்குளம் – கே. குமரேசன்
- பழனி – பி. பூவேந்தன்
- திண்டுக்கல் – ராஜேந்திரன்
- அரவக்குறிச்சி – முகமது அனிஃப் ஷாயில்
- திருச்சிராப்பள்ளி கிழக்கு – வீரசக்தி
- திருவெறும்பூர் – முருகானந்தம்
- முசிறி – டாக்டர் கோகுல்
- துறையூர் -யுவராஜ்
- குன்னம் – ஷாதிக் பாட்ஷா
- பண்ருட்டி – ஜெயலானி
- மயிலாடுதுறை – ரவிச்சந்திரன்
- நாகப்பட்டினம் – அனாஸ்
- கீழ்வேலூர் – டாக்டர் சித்து ஜி
- பட்டுக்கோட்டை – டாக்டர் சதாசிவம்
- விராலிமலை – சரவணன் ராமதாஸ்
- புதுக்கோட்டை – எஸ்.மூர்த்தி
- திருமயம் – ஆர்.திருமேனி
- ஆலங்குடி – வைரவன்
- காரைக்குடி – ராஜ்குமார்
- மேளூர் – கதிரேசன்
- சோழவந்தான் – யோகநாதன்
- மதுரை மேற்கு – முத்துகிருஷ்ணன்
- திருமங்கலம் – ராம்குமார்
- ஆண்டிப்பட்டி – எஸ். குணசேகரன்
- போடி – கணேஷ்குமார்
- கம்பம் – வேதா வெங்கடேஷ்
- திருவில்லிப்புத்தூர் – குருவய்யா
- அருப்புக்கோட்டை -உமாதேவி
- பரமக்குடி -கருப்புராஜ்
- கோவில்பட்டி – ஜி கதிரவன்
- க.குமரி -பி.டி.செல்வகுமார்
- நாகர்கோவில் – மரியா ஜேக்கப் ஸ்டான்லி
- குளச்சல் – லதீஷ் மேரி ஆகியோர் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியின் சார்பாக போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் வெளியிடுகிறார். தற்போது நேரலையில். #நம்மசின்னம்டார்ச்_லைட் #தமிழகம்விற்பனைக்குஅல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை https://t.co/SxxUK5nzD1
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 10, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025