#ELECTIONBREAKING : இன்று 11 மணிக்கு மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு…!
திமுக கட்சியின் கூட்டணி கட்சியான மதிமுக இன்று 11 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திமுக கட்சியின் கூட்டணி கட்சியான மதிமுக இன்று 11 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிடவுள்ளார்.