#ElectionBreaking: உள்ளாட்சி தேர்தல் – 19.61% வாக்குப்பதிவு!
முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணிவரை 19.61% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 19.61% வாக்குகள் பதிவாகி உள்ளது.