திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்பின் வரும் சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்திருந்தார்.
இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் அளித்திருந்தார். இந்த நிலையில், திமுகவுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார்.
திமுகவுக்கு ஆதரவு மற்றும் தொகுதிகள் கேட்டு தந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை வாபஸ் பெற்றுள்ளது. நேற்று தொகுதி கொடுப்பதாக சொல்லியதாகவும், இன்று இல்லையென கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியும் வாபஸ் பெற்றதாக தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…