#ElectionBreaking: மதுவிலக்கை வலியுறுத்துவோம் – காங்கிரேஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு.!

Default Image

சட்டப்பேரவை தேர்தலுக்கான 26 தலைப்புகளின் கீழ் காங்கிரேஸின் தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அதற்கான தொகுதிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 21 பேர் கொண்ட முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. மீதமுள்ள 4 வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் 26 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் உள்ளன. அதன்படி,

    • திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
    • தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க வலியுறுத்தப்படும்.
    • தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் செய்யப்படும்., நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.
    • மருத்துவ படிப்பில் ராசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும்.
    • டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை.
    • ஆவணப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டங்கள் கொண்டுவரப்படும்.
    • வேளாண் பாதுகாப்பிற்காக புதிய மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை.
    • அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
    • புதிதாக தொழில் முதலீடு செய்கிற முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரி விலக்கு.
    • பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நுண் தொழில் முனைவோர், வங்கிகளில் பெற்ற கடனுக்காக 50 சதவிகிதத்தைத் தமிழக அரசு மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்