#ElectionBreaking: என்னை 10 கோடிக்கு விலை பேசினார்கள் – வேட்புமனு தாக்கல் செய்தபின் சினேகன் பேட்டி.!
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.
விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கவிஞர் சினேகன். துடிப்பான இளைஞர். விருகம்பாக்கம் மக்களுக்கு ஐந்தாண்டுகள் உழைக்க ஆர்வத்தோடும் சிறப்பான திட்டங்களோடும் காத்திருக்கிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும். pic.twitter.com/5ChkMlX6eS
— Kamal Haasan (@ikamalhaasan) March 18, 2021