#ELECTIONBREAKING : ‘வீட்டில் ஒருவருக்கு அரசு பணி’ – அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு…!
சென்னையில் நடைபெற்ற அமமுக பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற அமமுக பொது கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த தேர்தல் அறிக்கையின் படி, ஆண்களுக்கும் இருசக்கர வாகனத் திட்டம் விரிவுபடுத்தப்படும், பேரூராட்சி/ஊராட்சி தோறும் அம்மா உணவகங்கள் நிறுவப்படும், தமிழர் பண்பாட்டு திருவிழாவாக ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும்,அரசு நிதியுதவி வழங்கும். மாதானதொரும் மின்கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும். 6-ம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 50,000- ஆகவும், 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும் உயர்த்தப்படும். மாதத்திற்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். மது உற்பத்தி ஆலைக்கு அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும். தமிழக வேலைவாய்ப்பில் 85% தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் கொண்டு வரப்படும் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளார்.