#BREAKING: ஈரோடு இடைத்தேர்தல் – தபால் வாக்குகள் பெறும் பணி தொடக்கம்!
ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கியது.
தபால் வாக்குகளை பெறும் பணி:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் முதன்முறையாக தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. முதிய வாக்காளர்களின் வீடு தேடி சென்று வாக்குகளை பதிவு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோர், கொரோனா பாதிப்பு உடையோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டர் தபால் வாக்கு செலுத்த படிவம் பெற்ற நிலையில், அவர்களிடம் இருந்து தபால் வாக்குகளை பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது.
இரண்டு நாட்களுக்குள் முடிக்க இலக்கு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 321 பேர் உள்ளனர். 2 நாட்களுக்குள் முதிய வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்யும் பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபக்கம் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், மறுபக்கம் தேர்தல் பணிக்காக தேர்தல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் ஒரு ஒரு பகுதியாக தான் இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகளை பெற 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடு வீடாக சென்று வாக்குகள் பெறப்படுகின்றன.