#ELECTIONBREAKING : தேர்தல் நாளான ஏப்.6-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு…!
தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து செயலாளர் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நாளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் நாளான ஏப்.6ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து செயலாளர் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வந்தாலும், தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க பொதுவிடுமுறையும் உதவும் என கருதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.