#ElectionBreaking: திமுக கூட்டணி – தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியீடு.!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் கடந்த ஒரு வாரமாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி, காங்கிரஸ் 25 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு, விசிக 6, மதிமுக 6, சிபிஐ 6, சிபிஎம் 6, ஐயூஎம்எல் 3, கொ.ம.தே.க. 3, ம.ம.க. 2, த.வா.க. 1, ம.வி.க. 1, ஆதித்தமிழர் பேரவை 1 ஆகிய 60 தொகுதிகளை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் குறிப்பாக வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. சில கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மந்தம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி கூட்டணி கட்சிகளை சேர்த்து 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப்படும் என தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்து, முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தந்த தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்று கூட்டணி கட்சிகளுடன் இழுபறி இருப்பதால், தொகுதிகளின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

Live: பங்குனி உத்திர திருவிழா முதல்.., சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா வரை.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…

13 minutes ago

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…

21 minutes ago

ஐபிஎல் தொடரில் கிங் கோலியின் புதிய சாதனை.! வேற யாருமே இல்ல..! அப்படி என்ன செய்தார்?

பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…

1 hour ago

தோனி தலைமையில் இன்று களம் காணும் CSK.! வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை?

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…

2 hours ago

தமிழ்நாடு வந்தார் அமித் ஷா.., புதிய பாஜக தலைவர் குறித்து ஆலோசனை.!

சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…

3 hours ago

விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…

3 hours ago