#ElectionBreaking: 140 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியல் தயார்., விரைவில் வெளியீடு.!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தனித்துப் போட்டியிட 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தயார் செய்துள்ளதாக தகவல்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, மாவட்ட செயலாளர்களுடன் தனித்தனியாக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்கே சுதீஷ் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என கலந்தாலோசித்து அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்தனர். ஒவ்வொரு மாவட்டத்தில் 2 வேட்பாளர்கள் என தேர்வு செய்து, பின்னர் அதில் சரியான 140 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளனர்.
தேமுதிகவின் 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடுவதாக தகவல் கூறப்பட்ட நிலையில், சில கருத்து வேறுபாடு காரணமாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேர்தலில் தனித்து போட்டியிட நாங்கள் தாயக இருக்கிறோம், நீங்கள் தயாரா என்றும் திடீர் கூட்டணி ஏற்பட்டால் உங்கள் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்க தயாரா எனவும் கேட்கப்பட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஆகையால், 234 தொகுதிகளுக்கு தேமுதிக வேட்பாளர் பட்டியல் தயாரித்து வருகிறது. அதில், தற்போது 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, ஒருபக்கம் தேமுதிகவிற்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. மறுபக்கம் அமமுக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தேமுதிக தனித்து போட்டியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.