தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொண்டார். வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் சாகு ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் வாக்கு எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்ற நிலையில், திட்டமிட்டபடி தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தலைமை அதிகாரி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…