#ElectionBreaking: காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு நாளைக்குள் வெளியிடப்படும் – வீரப்ப மொய்லி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திமுக – காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று அல்லது நாளைக்குள் முடிவாகும் என வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தொகுதி பங்கீடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு பிறகு தேர்தல் மேற்பார்வையாளர் வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார்.