ELECTIONBREAKING : முதல்வரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது – அதிமுக குற்றசாட்டு
முதல்வரின் பிரச்சாரம் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக குற்றசாட்டு.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் பிரச்சாரம்
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுக குற்றசாட்டு
இந்த நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பு விதிமுறைக்கு எதிரானது என அதிமுக சார்பில் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.