கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் 24 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அந்த இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி தேர்தலில் மநீம கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியானது.
இதையடுத்து, கடந்த 12ம் தேதி 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு, ராயபுரம், திருவாரூர் உள்ளிட்ட 24 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…