சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ம் தேதி 17 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது. அதன்படி, தாராபுரம் (தனி ) – எல்.முருகன், கோவை தெற்கு – வானதி சீனிவாசன், காரைக்குடி – ஹெச் .ராஜா, அரவக்குறிச்சி – அண்ணாமலை, நாகர்கோவில் – எம்.ஆர்.காந்தி, ஆயிரம் விளக்கு – குஷ்பு, துறைமுகம் – வினோஜ் பி.செல்வம் ஆகியோர் இடம்பெற்றிருந்தன.
மேலும், திருவண்ணாமலை – தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே.சரஸ்வதி, திட்டக்குடி – பெரியசாமி, திருவையாறு – பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு – சரவணன், குளச்சல் -பி.ரமேஷ், திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் -டி.குப்புராமு, விருதுநகர் – பாண்டுரங்கன், திருக்கோவிலூர் – வி.ஏ.டி.கலிவரதன் உள்ளிட்டவர்களும் 17 பேரில் இடம்பிடித்திருந்தனர்.
இதனிடையே, திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்தனர். இரு கட்சிகளும் மீதுமுள்ள தொகுதிகளில் யார் வேட்பாளர் என காத்திருந்த நிலையில், நேற்று எஞ்சிய 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. விளவங்கோடு- விஜயதரணி, வேளச்சேரி – ஜே.எம்.எச்.ஹசன், மயிலாடுதுறை – ராஜகுமார், குளச்சல் – பிரின்ஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், பாஜகவில் மீதமுள்ள 3 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உதகை – போஜராஜன், விளவங்கோடு – ஜெயசீலன், தளி – நகேஷ்குமார் உள்ளிட்டவர்களை அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக மீண்டும் இந்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சியின் மீதமுள்ள வேட்பளார் யார் என்று அறிவிப்புக்கு காத்திருந்த பாஜக, தற்போது வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…