திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதித் தமிழர் பேரவையின் அதியமான் கூறியதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக சம்மதம் தெரிவித்து, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுபோன்று, திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ஒரு தொகுதியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அதற்கான ஒப்பந்தமும், தற்போது கையெழுத்தாகியுள்ளது. பண்ருட்டி அல்லது நெய்வேலி தொகுதியை ஒதுக்கீடு செய்ய திமுக தலைமையிடம் கேட்டுள்ளோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…
சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…