சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.
திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.
அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…