#ElectionBreaking: அதிமுக எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.!

Default Image

அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அடிப்படை உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு.

அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் வரும் தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்திருந்தார். கடந்த 2011, 2016ல் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர். தற்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு வழங்காமல் பெருந்துறை தொகுதி வேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அறிவித்ததால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கம் செய்திருந்தார்.

இந்நிலையில், கொள்கை, குறிக்கோளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அதிமுகவிற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் பெருந்துறை தொகுதியில் அதிமுகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுபோன்று, மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால், சேந்தமங்கலம் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் ஈடுபட்டதால் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்