நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நிறைவு.
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகளுடன், மாநில தலைவர் அண்ணாமலை இரு தினங்களாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க அதிமுக மறுத்து வருவதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக இழுபறி நீடித்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக சென்னை அதிமுக அலுவலகத்தில் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.
அதிமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுக-பாஜக கூட்டணி, இடப் பங்கீட்டில் சிக்கல் இல்லை என்றும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடருவோம் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், முரசொலியில் ஆளுநரைப் பற்றி அவதூறாக எழுதப்பட்டுள்ளது. அவர் பல மேடைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடைப் பாராட்டியிருக்கிறார். அப்படி இருக்க ஆளுநர் பற்றி அவதூறாக பேசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? என்றும் தெரிவித்தார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…