அதிமுக – தமாகா இடையே தொகுதி பங்கீடு குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு சில கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதிமுக – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே மூன்று கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், சுலபமான முடிவு எட்டப்படவில்லை. தமாகா தரப்பில் 12 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில், அதிமுக தரப்பில் 3 முதல் 4 இடங்களை ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தொடர்ந்து தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே, அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியதால் தமாகாவுக்கு 5 முதல் 7 இடங்களை வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று தொகுதி பங்கீடு இறுதியாகும் என தமாகா தலைவர் ஜிகே வாசன் தெரிவித்திருந்தார். தமாகாவுடன் அதிமுக பேசுவதில் எந்தவித தயக்கமும் இருக்காது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக – தமாகா இடையே நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக – தமாகா பேச்சுவார்த்தை அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…