#ElectionBreaking: அமமுகவில் SDPI கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி., ஒப்பந்தம் கையெழுத்தானது.!
அமமுக கூட்டணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு (SDPI) கட்சி இணைவது உறுதியானது என்றும் SDPI கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து SDPI கட்சி நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாக்வி டிடிவி தினகரனுடன் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு எதற்க்காக நடைபெறுகிறது என்ற தகவல் வெளிவராத நிலையில், தற்போது சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு (SDPI) கட்சிக்கு அமமுகவில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே அமமுகவில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமமுக கூட்டணியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
2021 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா-தமிழ்நாடு(SDPI) கட்சியும் கூட்டணி ஒப்பந்தம். pic.twitter.com/PG7z5tRnN0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 11, 2021