#ElectionBreaking: தேர்தலில் போட்டியிட 5,002 பேர் வேட்புமனு தாக்கல்., வரும் 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆண்கள் 4,213, பெண்கள் 787 மற்றும் திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 5,002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், குறைந்தபட்சமாக விளவங்கோட்டில் 6 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வரும் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் அதன்பிறகு அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை 5 மணிக்குள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.