#ElectionBreaking: தபாலில் வாக்களிக்க 1.59 பேர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் தபாலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நேரடியாக வாக்குச்சாவடி வர முடியதாக மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்களிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, தமிழகத்தில் 12 லட்சம் பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.
இதில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,59,849 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 49,114 பேர் தபால் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
பார்ம் 12டி என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் தபால் வாக்குகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மொத்தம் 2,08,963 லட்சம் பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார்கள். இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் 35,959 பேர் தாவல் வாக்களிப்பதற்கு இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.