#ElectionBreaking : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
வரும் பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசு இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
2001 முதல் 2006 மற்றும் 2016 முதல் 2021 வரை ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பே வேட்பாளரை பழனிசாமி அறிவித்துள்ளார். யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வரும் நிலையில், பழனிசாமி வேட்பாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/KeVUwIBVFm
— AIADMK (@AIADMKOfficial) February 1, 2023