தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் : கோவையில் அண்ணாமலை… சென்னையில் தமிழிசை…
Election2024 : மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தின் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் கூடுதலாக நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது.
இதில், முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடுகிறார்.
மற்ற வேட்பாளர்களின் விவரங்கள் இதோ….
- மத்திய சென்னை – P.செல்வம்.
- வேலூர் – ஏ.சி.சண்முகம் (புதிய நீதி கட்சி)
- கிருஷ்ணகிரி – சி.நமசிவாயம்.
- நீலகிரி (தனி) – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
- பெரம்பலூர் – பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி)
- தூத்துக்குடி – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.
- கன்னியாகுமரி – முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.
ஆகியோர் போட்டியிட உள்ளதாக பாஜக தலைமை தற்போது அறிவித்துள்ளது. மீதம் உள்ளவர்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது