Election Breaking : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…
Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ….
- திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா.
- அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல்.
- ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார், பி.இ., பி.எச்டி.
- கடலூர் – தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குனர்)
- மயிலாடுதுறை –ம.க.ஸ்டாலின், பி.எஸ்சி.
- கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார், பி.ஏ.,பி.எல்.
- தருமபுரி – அரசாங்கம், பி.காம்.
- சேலம்- ந. அண்ணாதுரை, பி.ஏ.,பி.எல்.
- விழுப்புரம் – முரளி சங்கர், பி.காம்.
இதில் காஞ்சிபுரம் (தனித்தொகுதி) மக்களவை தொகுதியில் பாமக சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் , வெளியான பட்டியல் மூலம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தெரிகிறது.