கரும்பு விவசாயி to மைக்.! நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் இதோ…
Election2024 : சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தை பொது சின்னமாக கொண்டு தேர்தலை சந்தித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற தேர்தல் வரையில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்ட்டியிட்டு தமிழகம் முழுவதிலும் 6.5 சதவீத வாக்கு சதவீதத்தை பெற்றது.
Read More – கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை… இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு.!
அதே போல வரும் மக்களவை தேர்தலிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தை அணுகியது நாம் தமிழர் கட்சி. ஆனால் அதற்கு முன்னரே, கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கோரியதால் முன்னுரிமை அடிப்படையில் அந்த கட்சிக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
Read More – பெண்களுக்கு மாதம் ரூ.3,000… தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக!
இதனால், புதிய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிவித்து இருந்தார். இதனை அடுத்து தற்போது நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கி, இந்த சின்னத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் பயன்படுத்தி கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.