தேர்தல் பரப்புரை ஸ்டார்ட்ஸ்…. முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் பிரச்சார அட்டவணை…

Tamilnadu CM MK Stalin - Edappadi Palanisamy

Election2024 : நாடுமுழுவதும் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அட்டவணையானது வெளியாகி உள்ளது. அதில், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குபதிவில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Read More – தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…

நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அடுத்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ளதால் அதற்கடுத்த தேர்தல் பிரச்சார இடைவெளி நாட்கள் என்பது வெறும் 19 நாட்களே உள்ளது. இதனால் தேர்தல் பிரச்சார வேலைகளில் தற்போதே தீவிரம் கட்டி வருகிறது தேசிய, மாநில கட்சிகள்.

Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக!

தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு , 23ஆம் தேதி கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் பிரச்சாரம் செய்கிறார். பின்பு 39 தொகுதிகளுக்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

Read More –  மீண்டும் ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின்… வரலாற்று வெற்றி!

அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சி நாவலூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அடுத்து, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி , விருதுநகர், ராமநாதபுரம் என சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு மார்ச் 31ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்கள் வரையில் பிரச்சாரம் செய்யும் அட்டவணை வெளியாகியுள்ளது.

பாஜக சார்பில், பிரதமர் மோடி, இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 6 முறை தமிழகம் வந்து பாஜகவுக்கு ஆதரவாக தனது பிரச்சாரத்தை துவங்கி நடத்தி வருகிறார். நேற்று கோவையில் ரோட் ஷோ பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, இன்று சேலத்தில் பாஜக கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக என எந்த பிரதான கட்சிகளுமே இன்னும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இவர்கள் தான் என அறிவிக்காமல் இருந்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்