தற்போது வரை வேட்புமனு தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்!

Published by
மணிகண்டன்

Election2024 : தற்போது வரையில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள் விவரங்களை இதில் காணலம்.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி மார்ச் 28 என்பதால் இன்னும் 2 நாட்களே உள்ளதால் பலரும் மும்முரமாக தங்கள் வேட்புமனுக்களை அளித்து வருகின்றனர்.

திமுக எம்பிகள் டி.ஆர்.பாலு, கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், தமிழிசை சவுந்தரராஜன், ராதிகா, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் என பலரும் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்த தேர்தல் அலுவரிடத்தில் அளித்து வருகின்றனர்.

  • திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
  • திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை மக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜனை பார்க்கவே, இருவரும் ஆரத்தழுவி நலம் விசாரித்து கொண்டனர்.
  • முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுவந்தராஜன், தென் சென்னை தொகுதி தேர்தல் அலுவலரிடம் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • விசிக எம்பி ரவிக்குமார் , விழுப்புரம் மக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
  • திமுக எம்பி கதிர் அனந்த் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
  • திண்டுக்கல்லில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் R சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • திமுக கூட்டணி மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ, திருச்சி மக்களவை தேர்தல் அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
  • ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • கன்னியாகுமரியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,  வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் மக்களவை தொகுதி அலுவலரிடத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் பாஜக சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
  • நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட தேர்தல் அலுவலரிடத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
  • மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் அலுவலக வளாகத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை சரத்குமார் தோளில் தட்டி வாழ்த்து தெரிவித்தார்.
  • தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி, பாஜக கூட்டணி பாமக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
  • இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் இந்த முறை, பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்டு எம்பியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

14 minutes ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

55 minutes ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

1 hour ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

10 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

12 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

13 hours ago