நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதனிடையே, ஜனவரி 31-க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டியிருந்தார்.
கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைபடுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 2 நாட்களுக்குள் மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…