மக்களவை தேர்தல் : கனிமொழி முதல் தமிழிசை வரை உள்ள நட்சத்திர வேட்பாளர்களின் முன்னணி நிலவரம்
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.
மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் முன்னணி நிலவரம்
அதிமுக சார்பில் கரூரில் போட்டியிட்ட தம்பித்துரை பின்னடைவு அடைந்துள்ளார். அதிமுக சார்பில் தேனியில் ரவீந்திரநாத் முன்னிலையில் உள்ளார்.
தூத்துகுடியில் போட்டியிட்ட பாஜக தலைவர் தமிழிசை சுவுந்தராஜன் பின்னடைவு அடைந்துள்ளார்.
பாஜக சார்பில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதா கிருஷ்ணன் பின்னடைவு அடைந்துள்ளார்.
பாஜக சார்பில் சிவகங்கையில் போட்டியிட்ட ஹெச் .ராஜா பின்னடைவு அடைந்துள்ளார்.
நீலகிரியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆ ராசா முன்னிலையில் உள்ளார்.
தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
மத்திய சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார் .
ஸ்ரீ பெரம்பதூரில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர் பாலு முன்னிலையில் உள்ளார்.
தேனியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இவிகேஎஸ்.இளங்கோவன் பின்னடைவு அடைந்துள்ளார்.
திருச்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் முன்னிலையில் உள்ளார்
சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்.
தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் பின்னடைவு அடைந்துள்ளார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்ட எல் .கே சுதீஷ் பின்னடைவு அடைந்துள்ளார்.
சிதம்பரத்தில் விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.