ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்தியில் பாஜக ஆட்சியை பிடித்தது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில் இதனோடு தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் ஆரணி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2,28,096 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.