ELECTION BREAKING: திருப்பூர் 4வது சுற்றின் முடிவுகள் வெளியானது
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .
இதில் திருப்பூர் தொகுதியில் 4 சுற்றாக வாக்கு எண்ணிகை எண்ணப்பட்டு வந்தது. அதன் படி 4 வது சுற்று முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
4 வது சுற்று முடிவில் சிபிஐ சார்பில் போட்டியிட்ட சுப்புராயன் 1,03,976 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.அனந்தன் 79,326 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் 10,167 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.பி.செல்வம் 8,612 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக சார்பில் போட்டியிட்ட ஜெகநாதன் 7,674 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் திருப்பூரில் தற்போது சிபிஐ சார்பில் போட்டியிட்ட சுப்புராயன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.