ELECTION BREAKING: நீலகிரியில் ஆ.ராசா 82,689 வாக்குகள் பெற்று முன்னிலை

Default Image

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தபால் வாக்கு எண்ணிக்கையில்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தமிழகத்தில் அதிகமான  இடங்களில் முன்னிலை பெற்று வந்த நிலையில் மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது .

இந்நிலையில் திமுக சார்பில் நீலகிரியில் போட்டியிட்ட ஆ.ராசா 27,529 வாக்குகளை முதல் சுற்று முடிவில் பெற்ற அவர்  9,636 வாக்குவித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது முன்றாவது சுற்று முடிவுகளிலும்  ஆ.ராசா  82,689 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் .

அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.தியாகராஜன் 52,558  வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்