ELECTION BREAKING: வடசென்னை முதல் சுற்று முடிவுகள் விவரம் வெளியானது

Default Image

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.

ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி வட சென்னையில் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

வடசென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி வீராசாமி 32,266 வாக்குகள் பெற்றுள்ளார்.அதே போல் தேமுதிக சார்பில் போட்டியிட்ட மோகன்ராஜ் 8,319 வாக்குகள் பெற்றுள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட மெளர்யா  6,519 வாக்குகள் பெற்றுள்ளார். நான் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட காளியம்மாள் 3216 வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக சார்பில் போட்டியிட்ட சந்தான கிருஷ்ணன் 1094 வாக்குகள் பெற்றுள்ளார்.

வட சென்னையை பொருத்தவரை திமுக சார்பில் போட்டியிட்ட கலாநிதி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்